LKR. 2450 Original price was: LKR. 2450.LKR. 2205Current price is: LKR. 2205.
In stock
ஆண், பெண்ணின் மேல் ஆதிக்கம் செலுத்துவது தவறே இல்லை என்பதற்கு சாட்சியாக இன்றைக்கும் பல தொலைக்காட்சி சீரியல்கள், திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த ஆணாதிக்கக் கருத்தாக்கம் திரும்பத் திரும்ப எல்லோர் மனத்திலும் காட்சிகளாக, பாத்திரங்களாக அழுத்தமாக பதியவைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு பெண், சக பெண்களின் பாலியல் வேட்கைக்கு நியாயம் வேண்டிக் குரல் கொடுத்தால் என்னவாகும்? அந்தப் புரட்சிக்குரல்தான் இந்தப் புத்தகம், தாம்பத்ய உறவில் திருப்தி என்பது ஆண், பெண் இருவருக்கும் பொது அதை திருமணமான ஒரு பெண் எப்படிக் கண்டடைவது என்பதை அறிவியல், மருத்துவம், உளவியல் ரீதியாக இந்த நூலிலுள்ள கட்டுரைகள் முன்வைக்கின்றன. மனைவி என்கிற மனுஷியின் உணர்வுகளுக்குக் கணவன் மதிப்பளிக்காதது என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் வழிவகுக்கும் என்பதை இந்த நூலிலுள்ள அத்தியாங்கள் விரிவாகப் பேசுகின்றன. திருமணமான ஒவ்வோர் ஆணும் பெண்ணும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.
-திலகவதி ஐபிஎஸ்
WhatsApp us