அவ்வளவு பிடித்தமான ஒருவரை அணைத்துக்கொள்ளும்போது இந்த உலகில் நம் சாகசங்களும் காத்திருப்புகளும் அத்தோடு முடிந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். உண்மையில் நாம் அப்போது மிகவும் களைத்துப்போயிருக்கிறோம். அத்தோடு எல்லாம் முழுமையடைந்துவிட வேண்டும் என்று அவ்வளவு...
ஆயிரம் துயர இரவுகளின் இருட்டில் நின்று எழுதப்பட்டதே நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம். மனுஷ்ய புத்திரனின் படைப்பியக்கத்தின் மற்றுமொரு பேரலையாக இந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது. மனித உறவுகளின் ஆழம் காண முடியாத பாழும் கிணறுகளின்...
பிரிவு என்பது துக்கம் என்பதைக் காட்டிலும் காலம் நமக்குத் தரும் ஒரு அவமானம் என்றே தோன்றுகிறது. நம் உடலைப் பற்றி நாம் அடையும் அவமானம். நம் நம்பிக்கைகளைப் பற்றி நாம் அடையும் அவமானம். நம்...
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள், மனித நடத்தையிலும் மனித உறவுகளிலும் நிகழ்ந்திருக்கும் வினோதங்களைப் பற்றி உரையாடுகின்றன. நம் சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்களினூடாக, நாம் எவ்வாறு நமக்கே ஒரு கேலிச்சித்திரமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை...
மனுஷ்ய புத்திரன் 2021 பிப்ரவரி 14 முதல் டிசம்பர் 25, 2021 வரை எழுதிய இக்கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் முகமாகவும், நாம் வாழும் காலத்தின் எண்ணற்ற ரகசியங்களின் நடனமாகவும் திகழ்கின்றன. இக்கவிதைகளில் பல...
ஒருவரும் வந்து சேர ஒரு நிமிடமே போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் நாட்கள் உடனிருந்தாலும் ஒருவர் கடக்க முடியாத தொலைவை இன்னொருவருக்கு அந்த ஒரு நிமிடத்தில் கடக்க முடிகிறது என்றால் இந்தக் காதலின் மர்மப் பாதைகள்தான்...
மரணத்திற்கு மிக அருகில் சென்று மீண்டெழுந்தவர்களின் கதைகள், நம் வாழ்விற்கு வெளிச்சமூட்டுபவை. எதிலிருந்தும் திரும்பிவரலாம் என நம்பிக்கை அளிப்பவை. மனுஷ்ய புத்திரனின் ‘வாதையின் கதை’ சிகிச்சைகால அனுபவங்களை கவித்துவ நோக்கில் விவரிக்கும் தொகுப்பு. சிகிச்சையின்...
இருபத்தொராம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்த காலகட்டம் சமூக, பண்பாட்டு வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் சிதைவுகளையும் இத்தொகுப்பில் உலா கவிதைகள் பேசுகின்றன. மனுஷ்ய புத்திரன், நவீன மனித இருப்பில் நிகழ்ந்திருக்கும் அபத்தங்களின்மீது...
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள்...