னக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு, பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. ஷைலஜா, வம்சி என்று அவரது குடும்பமே அன்பால் உருவானது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதுமே...
பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழுது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த...
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை...
“எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும்...
‘எப்படி எழுதுவது’ என்று ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கும், ‘நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்’ என்று அறிந்துகொள்வதற்காகக் கேட்பவர்களுக்கும் இந்நூல் உதவக் கூடும். – பாரா கலையைச் சொல்லித்தர முடியாது. ஆனால் நுட்பங்களை முடியும். இசை, ஓவியம் போன்றவை...
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது.
காதலைச் சொன்னதற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்கள் முற்றிலும் வேறானவை. சொல்வதற்கு முன், அங்கோர் இனிய விளையாட்டு இருக்கும். ‘நான் உன்னைக் கவர வருகிறேன், நீ என்னிலிருந்து முடிந்தால் தப்பித்து ஓடு’ என்பதான கண்ணாமூச்சி. ‘உன்னை...
நாம் விரும்புவதை மட்டும்தான் இந்தக் காதலில் காணவிரும்புகிறோம். பாவனைகளையும் பொய்களையும் சுயநலங்களையும் கலைத்துப்பார்க்காதவரை மகத்தான காதல் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்புறம் ஒரு நாள் பாதாளங்களைக் காண்கிறீர்கள். சட்டென ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். கோப்பையில்...
கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை நூலாக்கியிருக்கிறார். நுட்பமான அவதானிப்புகளுடனும் கவிதைச்...
பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார்....