சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத...
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய ‘நகரம்’,...
ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சுஜாதாவின் முதல் சயன்ஸ் பிக்ஷன் நாவல் இந்த ‘சொர்க்கத் தீவு’. அய்ங்கார் என்கிற கம்ப்யூட்டர் எஞ்சினியர் சொர்க்கத் தீவு என்கிற ஒரு விசித்திரப் பிரதேசத்துக்குக் கடத்தப்படுகிறான். அந்த...
திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப்...
கல்லூரிக்குப் போகிற பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, சுவாரஸ்யமான நாவலாகத் தந்திருக்கிறார் சுஜாதா.
உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா. சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம்...
இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விரிவான உதாரணங்களுடன் பதிலளிக்கிறது இந்த...
21’ம் விளிம்பு கட்டுரைத் தொடர் நான் குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994/95ல் இருந்தபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சில மொழிபெயர்ப்பு பொதுக் கட்டுரைகளும் கொண்ட...
விஜய் அண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சைத்தான்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. ‘ஆ..! 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென் பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய...
அவள் கண்களைப் பார்த்தேன். ஒரு வேளை அரை கிராக்கோ! அப்படித்தான் போலும். ஜாக்கிரதை. உடை ஒரு மாதிரி இருக்கிறது. பேச்சும் நடையும் கூட, அன்னியர் வீட்டு வாசல் கதவைத் தட்டி உள்ளே சுதந்தரமாக நுழைந்து…...
ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பார்ஸாரதியின் மனைவி இருப்பது வேறு ஊரில். கதையின் நாயகன் ஜோமோ...