புராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில்,...
இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில்...
பெண்களின் உணர்வுகளை இந்த அளவிற்கு எளிமையாகவும், தெளிவாகவும் பதிந்த யதார்த்த நாவல் சமீபத்தில் இதுதான் என்றே தோன்றுகிறது. உமா மகேஸ்வரி ஒரு கவிஞர் என்ற முறையில் மொழியையும் பெண் என்ற வகையில் பாத்திரங்களின் உணர்வோட்டத்தையும்...
அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித்துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுகிறான்? இந்த ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று...
சுஜாதா style Thriller கதை. அதன் கருக்களம் எல்லாமே பெங்களூரை சுற்றியே நடக்கும். பேர் தெரியாத பிரபலமான ஆங்கில புத்தகம் மற்றும் கதாசிரியர்களை அறிமுகபடுத்துவார். ஜாவா, கோபால், பைனரி என்று கணினி சம்பந்தப்பட்ட வார்தைகள்...
பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின் வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில்...
‘அர்த்தநாரி’யை எழுதும்போது பெரும் சுதந்திர மனநிலையில் இருந்தேன். என் மனமும் கைகளும் வெகு இயல்பாக இணைந்தன. அதன் வெளிப்பாடுகளை இதில் பரக்கக் காணலாம். இன்றைக்கு நாம் வாழும் வாழ்வில் இத்தனை சுதந்திர மனநிலை கூடாதோ...
அனிதா – இளம் மனைவி, குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு...
மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும்...
நீங்கள் சென்றுக்கொண்டிருக்கும் பாதையை விதி வளைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு அது உங்களைத் தூக்கி எறிந்தால் என்ன செய்வது? நீங்கள் போராடுவீர்களா, ஓடுவீர்களா அல்லது ஏற்றுக் கொள்வீர்களா? எண்பதுகளின்...
ஒற்றைப் போராக கண்முன் சித்தரிக்கப்படுவதன் வேர்களில் உள்ள முடிச்சுகளை தொட்டு எழுதி வரும் வாசுமுருகவேலின் அரசியல் பார்வை எழுத்தில் பூடகமாவே வெளிப்படும். ஆனால் இந்நாவலில் வெளிப்படையாகவே வருகிறது. நாவலில் சுட்டப்படும் தரப்புகளை விவாதிக்கலாம் மறுக்கலாம்....