கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும்...
மீட்சியே இல்லாததொரு பாவப் பிரதேசத்தில் வாழச் சபிக்கப்பட்டவனின் கதை. பர்மா பஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவல் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறது. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக்...
அப்படியே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை விடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின், நாம் எதைப் பேசாமல் இருக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள்...
“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை...
இது டிஜிட்டல் உலகம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தொழில்நுட்பம் நமது வாழ்வை எளிதாக்கியிருக்கிறது. இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிக்கலாக்கிக்கொள்வோரும் உண்டு. இந்த டிஜிட்டல் வலைக்குள் நாம் சிலந்தியா இல்லை மாட்டிக் கொண்ட பூச்சியா என்பதைப்...
காதல் இன்று வெகுவாக மாறிவிட்டது. காதல் மீதான எதிர்பார்ப்புகள், காதலின் சிக்கல்கள், குழப்பங்கள் வன்முறை முன்பைவிட அதிகரித்துவிட்டன. காதலுக்கும் நட்புக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய கோடு அழிந்ததில் பாய் பெஸ்டிகள் எனும் புதிய வகைமை,...
இமயமலை பயணத்தினூடே அராத்துவின் நள்ளிரவின் நடனங்கள் படிக்க நேர்ந்தபோது மிரண்டு விட்டேன். ஒரு Charles Bukowski கதைக்கு நிகரான கதை இது. சமகாலத்திய தமிழ் இலக்கியத்தின் நிலையை எண்ணினால் சோர்வே மிஞ்சுகிறது. யாருக்கும் வாசகனைத்...
சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக்...
தமிழர்கள் பாடல்களோடு வளர்கிறவர்கள், பாடல்களில் திளைக்கிறவர்கள், பாடல்களை ரசித்து அனுபவித்துப் பாராட்டுகிறவர்கள். அவர்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதற்காகவே இங்கு பல இசையமைப்பாளர்களும் பாடகர்களும் கவிஞர்களும் மிகச் சிறந்த படைப்பூக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள், கேட்கக் கேட்கச் சுவை...
இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள்தான் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள். எதிர்த் திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள்....
“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக்...