கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்டதுமான பண்பாட்டைக் கட்ட மத நிறுவனங்கள் முயல்கின்றன. இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தப்பி, தனது முன்னோர் மரபைக்...
புனைவின் எண்ணற்ற சாத்தியக் கூறுகளைப் பிரமிக்கவைக்கும் விதத்தில் பயன்படுத்தும் வெங்கேடேசன் தமிழ்ப் புனைகதை உலகில் புதிய பிரதேசங்களை சிருஷ்டித்துக் காட்டுகிறார். பன்முக வாசிப்பை சாத்தியப்படுத்தும் இவரது எழுத்து தமிழில் இதுவரை புழக்கத்தில் இருந்துவரும் புனைவின்...
ரேமண்ட் கார்வர் அமெரிக்கச் சிறுகதையாளர். நசிந்துபோயிருந்த யதார்த்தவாத சிறுகதை மரபைப் பெரும் வீச்சுடன் மீண்டும் உயிர்ப்பித்தவர். எளிமையான சித்தரிப்பும் அலட்டலில்லாத மொழிநடையும் வாசிப்பில் எவ்வளவு ஆழங்களையும் சாத்தியங்களையும் உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர். உலக...
ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று “வெண்ணிறக் கோட்டை”. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி “கிழக்கிலிருந்து...
தன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். ‘அபிதா’ தன் காலத்து வாசகர்களின் மனத்தில் அழியாக் காவியமாக வீற்றிருக்கும் ஒரு படைப்பு. காதலின் துயரத்தையும் அது உருவாக்கும் மனப்பிறழ்வையும் இவ்வளவு...
குர்திஸ்தான் விடுதலையை இலக்காக வைத்துப் போராடியவர்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நினைவுப் பேழை. காதல், பாசம், வீரம், சோகம்,...
தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. தி.ஜா.வின்...
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு...