செல்வச் செழிப்பும், மிகுந்த வசதிகளும் கொண்ட மேட்டுக்குடிகளாக தாம் வாழ்வதாக, அடுத்தவர்களின் பார்வைக்குக் காட்டப் பாடுபடும் பரிதாபத்துக்குரிய மத்திய தரப்பினரின் ஜீவிதங்கள், போலி மற்றும் வீண் பகட்டுகளின் மீது கட்டியெழுப்பப்பட்டவை. அதை அவர்களே அறிவார்கள்...
ஆல்பர்ட் காம்யுவின் இளமை பொங்கும் எழுத்துகளின் இந்தத் தொகுப்பு அவரது எதிர்காலப் படைப்புகளுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதைக் காணலாம். காம்யு தனக்கென்று ஒரு தனிக் குரலை நிலைநிறுத்த மேற்கொண்ட தீவிர, இரகசிய முயற்சியைக் காட்டுகிறது....
இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருக்கவில்லை. போர் உச்சம் பெற்று நாளாந்தம் படையினரின் சடலங்கள் சவப்பெட்டிகளில் வீடுகளுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் ‘பிரபாகரனும் நேசிக்கப்பட வேண்டியவர்’ என்று சிங்களவர்களுக்கு அன்பாக எடுத்துரைக்கும்...
அறிவியல் தொடர்பான விஷயங்களை எளிய நடையில், யாரையும் பயமுறுத்தாமல், விளக்கமாக எடுத்துச் சொல்கிற புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவு. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் கிழக்கு பதிப்பகத்திலிருந்து நிறைய அறிவியல் தமிழ் நூல்கள் வெளிவரவிருக்கின்றன....
எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி...
எல்லா உரையாடல்களும் எங்கோ பாதியில் முறிகின்றன. பாதி வாக்கியத்தில் குரல் உடைந்து விடுகிறது. கிசுசிசுக்கும் அன்பின் ரகசியக்குரல்களுக்கு நடுவே யாரோ சட்டென உள்ளே வந்துவிடுகிறார்கள். நெருங்கிவரும் வேளையில் எல்லாம் ஒரு திரை விழுகிறது. இது...
கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்டுள்ள அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள், ஒரே ஒரு அமெரிக்க வாழ்வியலை பேசும் சிறுகதை, இது மட்டுமல்லாமல் ஒரு புதிய சிறுகதை ஒன்று என்று மொத்தமாக...
தலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான...
பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின் வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில்...
ஒரு புத்தகம் என்பது ஒரு அனுபவம். அம்பறாத்தூணி என்ற இந்த நூலில் கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் பதினைந்து சிறுகதைகளும் பதினைந்து அனுபவங்கள். பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு, முப்பத்தோராம் நூற்றாண்டு என பல்வேறு காலங்களில் இந்த...
‘ரிலையன்ஸ்’ என்ற பெயரை இன்றைக்கு உலகமே அறியும். காரணம், உலகப் பணக்காரர்களுடைய வரிசையில் படிப்படியாக மேலே சென்று அசத்திக்கொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. முகேஷின் வெற்றி மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை, ஆனால், அதற்கு அடித்தளம்...