ஜென் கவிதைகள், இறகின் மிருதுவும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும்போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்திக் காட்ட இயல்கிறது என்பது, ஜென் மார்க்கம் செய்யும் மாயம்...
நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞானப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு...
‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற இலக்கிய அற்புதத்தின் தொடர்ச்சியாக அருந்ததி ராய் நிகழ்த்தியுள்ள புனைவியல் மாயம் ‘பெருமகிழ்வின் பேரவை’. சமகால நிகழ்வுகள் காரணம் கற்பிக்கப்பட்டு வரலாறாக உருவாகும் முன்பே அவற்றின் மானுடச் சிக்கல் இந்நாவலில்...
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் தீராத ஆர்வத்தைத் தூண்டக் கூடிய அத்தியாயம் வரலாற்றில் இருக்குமானால் அது இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை நாவலை எழுதும் வேளையில் சரியென்று...
பொ. கருணாகரமூர்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியர். அவரது முன்னைய நினைவலையான ‘பெர்லின் இரவு’களின் தொடர்ச்சியாக வும், விரிவாக்கமாகவும் அமைவது இந்நூல். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன்கூடிய இவரது...
நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என்று சொல்வதுண்டு. ஒரு நல்ல நாவல், வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும்; ஒரு வரலாற்றுத் தெளிவு நாவலுக்குள் செயல்பட வேண்டும்; கதை மாந்தர்கள் உணர்வு...
நாம் மிகச் செழிப்பான ஒரு பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர், செலவுகளை ஈடுகட்டுவதற்காக மேன்மேலும் அதிக நேரம் வேலை செய்து...
தமிழ் நாவல் சரித்திரத்தில் முதன் முதலாக விமர்சனபூர்வமாக கலை பிரக்ஞையுடன் க.நா.சு. எழுதிய பொய்த்தேவு தமிழ் நாவல் இலக்கிய வளப்பத்தின் ஒரு மைல்கல்லாகிறது.
பீவிசி முற்றிலும் பாதிப்பில்லாத பொருளென நினைக்கிறீர்களா? மைக்ரோசிப்புகள்தாம் தொழில்நுட்பம் பற்றிய அனைத்துமா? அல்லது ஒரு டீசர்ட்டின் விலை அதன் உண்மையான அடக்கவிலையைப் பிரதிப்பலிக்கிறதா? மீண்டும் சிந்தியுங்கள். ஆனி லியோனார்டு குப்பைக் குழிகளின் மீது பித்துப் பிடித்தவர்....
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்நூல்.
மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் துபாய்க்கு மட்டும் கிள்ளித்தான் கொடுத்தான். ஆனால் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ள நாடுகளெல்லாம் பின் தங்கி நிற்க, துபாய் மட்டும் விண்ணளாவ...