69 பற்றி ‘காகத்தின் கலவிநிலை’ என வாத்ஸாயனர் சொல்கிறார், கீழ்மைச்செயல் என்ற தொனியில். கழிவுறுப்பில் இன்பம் ஊற்றெடுப்பது போல் கீழ்மையிலிருந்துதான் கலை முளைத்தெழுகிறது. இந்நூலை அத்திசையில் வைக்கலாம். துல்லியமாய் 100 சொல்லில் அடைத்த 69...
பழகும் எல்லா ஆண்களும் உன்னிடம் காதல் சொல்லிவிடுவதாக குறைபட்டாய் “பெண்ணிடம் நட்பாக மட்டுமே பழகமாட்டார்களா? ஆண்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ, ஆனால் நீ அப்படி இல்லை – அதனால் உன்னை மிகப்பிடிக்கும்” என்றாய், எச்சரிக்கும்...
அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று...
‘இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்’, யதார்த்தமான காதல் கவிதைகள் இல்லை. நிலையின்மையை மையமாகக் கொண்டவையும் இல்லை. மிக அதிகமான காதலுடனோ அல்லது காதலின் போதாமையைச் சுட்டியோ எழுந்திருக்கின்றன. காதலித்தலின் களைப்பை உதறுவதற்குத் தலைப்பட்டிருக்கின்றன. சில...
இந்த கவிதைகள் என்பது என் ஆண்மப் பிரியங்கா… அதிலும் காதலில் மௌனம் கலக்கும் போது தேவகணமாகி மனதோடு பேசுகின்றன கவிதைகள். கண்கள் அறியாமல், இமைகளுக்கு கொடுக்கப்படும் முத்தங்கள் போல, நான் அறியாமல் என் ஆன்ம...
கவிஞர் மனுஷ்ய புத்திரனின் நாற்பதாண்டுக் கால கவிதைப் பயணத்தில் வெளிவரும் ஐம்பதாவது கவிதை தொகுப்பு இது. ப்ரியத்தின் பதற்றங்களையும் பரவசங்களையும் நம் நெஞ்சின் ஆழத்தில் இக்கவிதைகள் வரைந்து காட்டுகின்றன. இதை வாசிக்கும் எவரும் இப்படித்தானே...
காதலைச் சொன்னதற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்கள் முற்றிலும் வேறானவை. சொல்வதற்கு முன், அங்கோர் இனிய விளையாட்டு இருக்கும். ‘நான் உன்னைக் கவர வருகிறேன், நீ என்னிலிருந்து முடிந்தால் தப்பித்து ஓடு’ என்பதான கண்ணாமூச்சி. ‘உன்னை...
நாம் விரும்புவதை மட்டும்தான் இந்தக் காதலில் காணவிரும்புகிறோம். பாவனைகளையும் பொய்களையும் சுயநலங்களையும் கலைத்துப்பார்க்காதவரை மகத்தான காதல் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்புறம் ஒரு நாள் பாதாளங்களைக் காண்கிறீர்கள். சட்டென ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். கோப்பையில்...
இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது. உலகின் நிரந்தர மகிழ்ச்சியாக இருப்பது காதலே. எந்தத் தேசத்திலும் எந்தச் சூழலிலும் காதல் மனிதர்களைச் சந்தோஷப்படுத்தவே செய்கிறது....
யார் அந்த கண்ணம்மா ? ‘கூட்டமான பேருந்தில் ஓட்டுநர் அருகில் நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு சில்லறையை நடத்துநருக்கு அனுப்பிவிட்டு டிக்கெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும்போது கட்டுமரம் போல கை மாறி மாறி தவழ்ந்து வந்து கொண்டிருக்கும்...