புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன்...
அமெரிக்காவின் பொருளாதாரப் பெரு வீழ்ச்சி (Great Depression) காலத்து விவசாய அரங்கத்தையும் அப்போது நடந்த பிழைப்பிற்கான குடிபெயர்வுகளையும் பின்னணியாகக் கொண்ட மகத்தான நாவல். அமெரிக்க நாவல்களின் பொற்கால எழுத்தாளர்களான வில்லியம் ஃபாக்னர், ஸ்காட் ஃபிட்ஜெரால்டு,...
நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘கௌரவன்’ துரியோதனன். இந்த இரண்டாம் பாகத்தில் –...
மலையாளத்தின் சிறந்த கதாசிரியர்களுள் ஒருவரான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நுட்பமான வாசகனால்கூட இக்கதைகளை வரிசைப் படுத்திவிட, முடியாதபடி காலத்தை மீறி நிற்கும் படைப்புகள் இவை.
ஒருவர் குறித்த அனுமானங்களும் பிம்பங்களும் செயல் பாடுகளும் அவருக்கும் மற்றொருவருக்கமான உறவு முறையில், பழக்க வழக்க அடிப்படையில் மட்டுமில்லாது புறச்சூழல் என்கிற சமூக, பொது பார்வை என்னும் அளவீடுகள், அழுத்தங்கள் வழியாக கட்டமைக்கப்படுகின்றன. உதாரணமாக,...
எர்ணாகுளத்தில் பிறந்து பீகார் மாநிலத்தில் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணிபுரியும் என்.எஸ்.மாதவனின் எழுத்துக்கள் பலராலும் பாரட்டப்பட்டவை. இவருடைய ‘ஹிக்விக்டா’ என்ற சிறுகதை இந்த நூற்றாண்டின் சிறந்த கதைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. சாகித்ய அகாதெமி விருது...
புகழ் பெற்ற ஒரு நூலாசிரியர், போர்முனைச் செய்திகளைச் சேகரிக்கின்ற ஒரு பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தன்னுடைய மனைவி திடீரென்று ஒரு நாள் எந்தச் சுவடுமின்றித் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்....