வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும்...
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப்...
வாழ்வின் தனிமையை, அதன் பன்முக நெருக்கடிகளை – ஆழ் மனம் சார்ந்தும், புறச்சூழல் சார்ந்தும் – தீவிரத்துடன் அலசுபவை ஹாருகி முரகாமியின் படைப்புகள். அதேபோல, கிழக்காசிய மனித வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரத்தின் நிழல் படிவதை...
ஜென் கவிதைகள், இறகின் மிருதுவும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும்போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்திக் காட்ட இயல்கிறது என்பது, ஜென் மார்க்கம் செய்யும் மாயம்...
வாழ்க்கையின் எந்தப் பல் சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கரை சார்ந்திருக்கிற உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும்.
நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞானப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு...
“இந்த நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை...
‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற இலக்கிய அற்புதத்தின் தொடர்ச்சியாக அருந்ததி ராய் நிகழ்த்தியுள்ள புனைவியல் மாயம் ‘பெருமகிழ்வின் பேரவை’. சமகால நிகழ்வுகள் காரணம் கற்பிக்கப்பட்டு வரலாறாக உருவாகும் முன்பே அவற்றின் மானுடச் சிக்கல் இந்நாவலில்...