21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் நூல்! பில் பிரைசன் தன்னைத் தயக்கத்துடன்கூடிய ஓர் ஊர்சுற்றி என்று கூறிக் கொள்கிறார். ஆனால் அவர் தன் வீட்டில் அடைந்து கிடக்கும்போதுகூட, தன்னைச் சுற்றி இருக்கின்ற உலகைக்...
அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின்...
உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, பல இடங்களில் தோண்டி...
காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல்...
ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல். உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது....
மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழுந்த பரபரப்புகளும் கண்டனங்களும் இன்று சரித்திரமாகிவிட்டன. சாகித்ய அகடமி பரிசு பெற்ற இ.பாவின் இந்நாவல் ஆங்கிலம்,...