வெறும் இடங்கள், வெறும் ரயில் நிலையங்கள், வெறும் சிறிய பொருட்கள் மற்றும் கணங்கள்; ஞாபகங்களை மொழியில் நெய்வது தவிர நீ செய்வது ஒன்றுமில்லை. ஆனால் அதைவிட இந்தப் பிரபஞ்சத்தை அலங்கரிப்பதும் வேறில்லை. – பா....
எல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்-அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும். சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான். இதற்கு அஞ்சியே...
ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது...
இலங்கையில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமல்ராஜ் பிரான்சிஸ், தற்போது சர்வதேச மனிதாபிமான நிறுவனம் ஒன்றில், ஆசியப் பிராந்தியத்திற்கான பொருளாதாரப் பாதுகாப்பு இணைப்பாளராகத் தாய்லாந்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். லெபனானில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய அமல்ராஜ், தான் பார்த்த,...
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி...
எப்போதும் பயணங்களே மனித ஜீவிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. செல்வமின்றி, அதிகாரமின்றி, எதிர்ப்பார்ப்பின்றி ஷௌக்கத் மேற்கொண்ட பயணத்தில் உண்மையும் அதனால் மேலெழுந்த மொழியும் கூட வந்திருக்கின்றன. புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்கக் கூடிய இப்பிரதியில்...
இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விரிவான உதாரணங்களுடன் பதிலளிக்கிறது இந்த...
21’ம் விளிம்பு கட்டுரைத் தொடர் நான் குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994/95ல் இருந்தபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சில மொழிபெயர்ப்பு பொதுக் கட்டுரைகளும் கொண்ட...
தமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து...
7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக்...
ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை கருத்துரை ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. “96” திரைப்பத்தின்...