நம்மை நாமே அணைத்துக் கொள்ளும் நிலை சூழல் எல்லோருக்கும் வரும். அச்சூழல்களில் எல்லாம் நம்மை நாமே அணைத்துக் கொள்ள உதவும் ஆயிரம் வழிகளில் ரிஸ்காவின் கவிதைகளும் அடங்கும்.மேலும் இத்தொகுப்பின் கவிதைகள் பல கைநீட்டி கண்ணீர்...
உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக் காட்டுகிறது. செவ்வியல்...
இப்படி ஒரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம்தான். கி.பி. 258ஆம் ஆண்டு வலேறியன் என்ற ரோமைப் பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துக்களை சூறையாட நினைத்திருந்தபோது இரண்டாம் சிக்ஸ்தூஸ் என்ற போப்...
அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று...
ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வினூடாக அற்புததரிசனம் தரும் நாவல்.உக்கிரமான உணர்வெழுச்சியும்,நீடித்துநிலைக்கும் பாதிப்பையும் உண்டாக்குவது.நம்காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களுள் ஒன்று.
மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும்...
நீங்கள் சென்றுக்கொண்டிருக்கும் பாதையை விதி வளைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு அது உங்களைத் தூக்கி எறிந்தால் என்ன செய்வது? நீங்கள் போராடுவீர்களா, ஓடுவீர்களா அல்லது ஏற்றுக் கொள்வீர்களா? எண்பதுகளின்...
ஒற்றைப் போராக கண்முன் சித்தரிக்கப்படுவதன் வேர்களில் உள்ள முடிச்சுகளை தொட்டு எழுதி வரும் வாசுமுருகவேலின் அரசியல் பார்வை எழுத்தில் பூடகமாவே வெளிப்படும். ஆனால் இந்நாவலில் வெளிப்படையாகவே வருகிறது. நாவலில் சுட்டப்படும் தரப்புகளை விவாதிக்கலாம் மறுக்கலாம்....
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார். மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார். 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்.
கணவன் – மனைவி உறவு குறித்து இதுவரை வெளிவந்துள்ளதிலேயே மிகப் பிரபலமான புத்தகம். இப்புத்தகம் இலட்சக்கணக்கான தம்பதியரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது. ஆண்களும் பெண்களும் தாங்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர் எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கிறோம்...
இந்தியர்களாகிய நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக, பத்திரிகையாளர் டோனி ஜோசஃப், வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற...