Rs. 3000 Original price was: Rs. 3000.Rs. 2550Current price is: Rs. 2550.
1 in stock
1 in stock
படைப்புணர்வின் வரம்பிற்குள் மானிட வாழ்வின் எல்லாப் பரிமாணத்தையும் கொண்டுவர முயன்ற ஒரு பேராசைக்காரப் படைப்பாளியின் உன்னதப் படைப்பு இந்த நாவல்.
இரண்டாம் உலகப் போர்க்காலத்து இஸ்தான்புல்லின் பின்னணியில், தனிமையுணர்வும் சஞ்சலமும் அன்புக்கான ஏக்கமும் கொண்ட ஒருவனின் காதலையும் பிரிவின் வேதனையையும் சொல்கிறது இந்நாவல். வாழ்க்கையின் சந்தோஷங்களையும் துக்கங்களையும், ஆச்சரியங்களையும் ஏமாற்றங்களையும், குதூகலத்தையும் விரக்தியையும் வஞ்சனையற்று பதிவுசெய்யும் தன்பினார், ஒட்டாமான் அரசின் வீழ்ச்சியோடு அநாதரவாகிப்போன அதன் கலை விழுமியங்கள் பற்றிய தனது ஓர்மையை நாவல் நெடுகிலும் வெளிப்படுத்துகிறார்.
சம்பவங்களும் விவாதங்களும் மனவோட்டங்களும் ஞாபகங்களுமாகப் பல வண்ணங்களுடன் நெய்யப்பட்டிருக்கிறது இந்நாவல்.