Rs. 1260 Original price was: Rs. 1260.Rs. 1070Current price is: Rs. 1070.
ஒற்றைப் போராக கண்முன் சித்தரிக்கப்படுவதன் வேர்களில் உள்ள முடிச்சுகளை தொட்டு எழுதி வரும் வாசுமுருகவேலின் அரசியல் பார்வை எழுத்தில் பூடகமாவே வெளிப்படும். ஆனால் இந்நாவலில் வெளிப்படையாகவே வருகிறது. நாவலில் சுட்டப்படும் தரப்புகளை விவாதிக்கலாம் மறுக்கலாம். அது ஈழப்போரின் அரசியல் சார்ந்த தெளிவுகளைத்தரலாம். ஆனாலும் அதைத் தாண்டி நாவல் குறிப்பிடும் மையப்பொருள் கவனம் கொள்ள வைக்கிறது. எந்த ஒரு பிரதேசமானாலும் அங்கு அடிப்படைவாதம் யாரால் ஊக்குவிக்கப்படுகிறது? அதன் தேவை என்ன ? அதன் சமகால பயனாளிகள் யார் யார் என்று ஒரு விவாதத்தையும் இது துவக்கக் கூடும். அத்தகைய விவாதங்கள் முந்தைய காலத்தின் மீதான ஒரு பிரேதபரிசோதனையாக இல்லாமல் நிகழ்காலத்திற்கும் ஒரு புரிதலை அளிக்கும். அந்த வகையில் இது முக்கியமான நாவலாகிறது.