Rs. 480 Original price was: Rs. 480.Rs. 430Current price is: Rs. 430.
1 in stock
1 in stock
பலாத்காரமாய் விரட்டியடிக்கப்பட்டதொரு அகதியின் அலைவை வீதியெங்கும் அழுகையோடும் ஆத்திரத்தோடும் இறைத்துப் போகும் ஒரு குழந்தையைப் போல் வெளிப்படுத்திச் செல்கிறது நெற்கொழுதாசனின் இக்கவிதைகள்.நாடு பிரிந்த ஏக்கத்தின் நடவுச் செடிகளைப் போலுள்ள இக்கவிதைகள், தேசியக் கதையாடல்களாய் மட்டுமே சுருக்கவியலாத பண்பாட்டு இருப்பின் சுமைப்பொதிகளாய், இருக்கின்றன.‘வல்லை வெளி’யின் நினைவில் பனிப்படர்ந்த தேசங்களில் பாதம் பதிக்கவியலாத மன அவதியை கொண்டிருக்கும் இக்கவிதைகள், இன்னுமின்னும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அகதி இருப்பின் கவிகளாக தோன்றுகிறது.ரகசியத்தின் நாக்குகளைத் தொடர்ந்து தமது இரண்டாவது தொகுப்பையும் வெளியிட வாய்ப்பை நல்கிய தோழர் நெற்கொழுதாசனுக்கு நன்றி.