LKR. 975 Original price was: LKR. 975.LKR. 880Current price is: LKR. 880.
பழகும் எல்லா ஆண்களும் உன்னிடம்
காதல் சொல்லிவிடுவதாக குறைபட்டாய்
“பெண்ணிடம் நட்பாக மட்டுமே பழகமாட்டார்களா?
ஆண்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ,
ஆனால் நீ அப்படி இல்லை –
அதனால் உன்னை மிகப்பிடிக்கும்” என்றாய்,
எச்சரிக்கும் உன் நூதனங்களை வெகுவாக ரசிக்கிறேன்
இல்லை உன் மீது எனக்கு எப்போதும் காதல் வரவே வராது என்றதும்
சடுதியில் சொன்னாய், “ஏன் எனக்கென்ன குறைச்சல்?”
– யாத்திரி
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us