WordPress Themes
அல்லிக்கேணி

Original price was: LKR. 1215.Current price is: LKR. 970.

Author :ஏனையோர்
Categories :கட்டுரை
Subjects :பிற
No of Pages :0
Publication :எழுத்து பிரசுரம்
Year :2021

Out of stock

Out of stock

Description

ஒரு எழுத்தின் வெற்றி என்பது வாசகனைத் தன்னை அந்த எழுத்தில் தேடவைப்பதில் உள்ளது. இதில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவருக்குமான அடையாளங்களுடன் நிரம்பி உள்ளது அல்லிக்கேணி.

அல்லிக்கேணி வாழ்வின் பகுதிகள் திருப்பு முனைகளும் சுவாரசியங்களும் நிரம்பியவை. அல்லிக்கேணி நாயகனின் நாட்களை இட்டு நிரப்புவர்கள் அனைவரும் அவரவர் வழியில் நாயகர்களே…முத்தத்தில் சிறிதென்ன பெரிதென்ன என்பதுபோல் அல்லிக்கேணி கதையில் இடம்பெற்ற காதல்களில்தான் சின்னச்சின்னதாய் எத்தனை அழகு. கலர்ஃபுல் அனுபவத்தில் வாசிப்பவர்களைப் பங்குபெறச் செய்யும் வசீகர எழுத்து. கலைடாஸ்கோப் கண்களுக்கு நேர் அலைவரிசையில் உணர்த்தப்படும் உரையாடல்கள் கதையின் இன்னொரு பலம்.

– கணேசகுமாரன்

ராம்ஜிக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடே தான் ஏற்க முடியும். நேர்த்தியும் சொல்ல வந்ததை “இது தான் இப்படித் தான்” என்று சொல்லிச் செல்லும் நேரடித் தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன. எந்தச் சித்திரமுமே ஒற்றைப் புள்ளியிலிருந்து விரிந்துகொண்டே செல்வது தான். எண்ணற்ற நினைவுக் கூடுகள் திறந்து கொள்வதற்குச் சிறு விஸில் சப்தம் போதும் தானே, அப்படித் தன் வாழ்க்கையின் நிஜங்களினின்றும் மெல்லிய இழையொன்றைத் தொடக்கப் புள்ளியாக்கிக் கதை சொல்ல முனைந்திருக்கிறார். காலத்தின் ஊடுபாவாக மனிதர்களைத் தரிசிக்க முயலுகையில் எந்தப் படைப்புமே அழகாக செறிவாக உருக்கொண்டு விடுகிறது.சென்ற நூற்றாண்டு இறுதி தசாப்தத்தின் ஞாபக செல்வாக்கு இந்தக் கதையின் உப நுட்பத் தரவுகளெங்கும் எதிர்லொலித்தபடி நகர்வது பலம். வாசிப்பவனின் மனக்குரலாக அல்லிக்கேணி நாவல் அயர்ச்சியற்ற கதை-அனுபவத்தை முன் வைக்கிறது. சென்னை எனும் மகாநிலத்தின் சொல்லப் படாத மனிதர்களை, மனங்களைச் சற்றே அருகே சென்று பார்க்கிற வாய்ப்பை வாசகனுக்கு நல்குகிற வகையில் இதன் முக்கியத்துவம் மறுக்க முடியாதது. வாழ்தல் இனிது.

– ஆத்மார்த்தி

“எதைச் சொல்வது, எதை விடுவது? இந்தப் புரிதலில் இருக்கிறது தேர்ந்த கலைஞனின் கலை நேர்த்தி. ராம்ஜீக்கு எதை எழுதுவது என்பதும் எதை விடுவது என்பதும் சம்சயமின்றித் தெரிந்திருக்கிறது. என்னளவில், என்ன எழுதுகிறோம் என்பதற்கு அடுத்து எப்படி எழுதுகிறோம் என்பதும் அதி முக்கியம். நடையில் பகட்டில்லாத நிதானம், அலட்டலில்லாத எளிமை இவை ராம்ஜீயின் கூடுதல் பலம். ‘எழுதியவர்களை எழுத்தாளனென்று யாரும் அழைப்பதில்லை. அந்த எழுத்து சிறிதளவாவது பாதிப்பு ஏற்படுத்தினால் மட்டுமே ஒருவன் எழுத்தாளன் என்று கருதப்படுவான்’ . அல்லிக்கேணியைப் படித்து முடித்ததும் ராம்ஜீயைப் பார்த்து, “இத்தனை நாளாய் ஏன் நீங்கள் எழுதவில்லை?” என்றே கேட்கத் தோன்றுகிறது.”

– திரைப்பட இயக்குனர் வசந்த் சாய்

Relate Books

3 in stock

காச்சர் கோச்சர்

Original price was: LKR. 780.Current price is: LKR. 660. Add to cart
Add to Wishlist

Out of stock

வெளிச்சம் என் மரணகாலம்

Original price was: LKR. 480.Current price is: LKR. 430. Read more
Add to Wishlist

ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும்

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2380. Add to cart
Add to Wishlist

Out of stock

மானுடம் வெல்லும்

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2380. Read more
Add to Wishlist

Out of stock

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது

Original price was: LKR. 2450.Current price is: LKR. 2080. Read more
Add to Wishlist

Out of stock

காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்

Original price was: LKR. 2400.Current price is: LKR. 2040. Read more
Add to Wishlist