Rs. 2800 Original price was: Rs. 2800.Rs. 2240Current price is: Rs. 2240.
டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது.
டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து, “ஆழ்மனத்தின் அற்புத சக்தி” என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே “புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது” என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிகொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன்.
இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன். இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல். திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன். இதன் மூலம் நூலில் இடம்பெற்றிராத “ எப்படி செய்ய வேண்டும் “ என்பது போன்ற விஷயங்களையும் நாம் இந்நூலில் சேர்த்திருக்கிறேன்.
– ஜேம்ஸ் ஜென்சன்