LKR. 1200 Original price was: LKR. 1200.LKR. 960Current price is: LKR. 960.
Out of stock
Out of stock
ஆசிரியர், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி கல்வி நிலையங்களில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றியவர். இவர், தான் பயணம் சென்ற நாடுகளில், படித்த புத்தகங்களில், பெற்ற அனுபவங்களை, கதை வடிவில் எழுதி உள்ளார். தான் சொற்பொழிவுகளில் கேட்டது முதல், தன் தாத்தா கூறியது வரையிலான, 100 கதைகளை தொகுத்திருக்கிறார்.
‘கவலைக்கும், பரிதவிப்புக்கும் ஏற்ற சிறந்த மாற்று மருந்து, வேலை; எடிசனின் சில நிமிட பொறுமை, ஒரு லட்சம் டாலர்களை பெற்றுத்தந்தது; இலவசமாக வழங்கப்படும் எதற்குமே மதிப்பு இருக்காது’ போன்ற பல்வேறு கருத்துகளை, ரசிக்கும் வகையில் தொகுத்திருக்கிறார்.
புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ள எஸ்.ராமன், குறை சொல்ல முடியாத அளவிற்கு, தன் பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
சாதாரண ஒரு சம்பவம் அல்லது கதை; அது தொடர்பான ஒரு கேள்வி; அது உணர்த்தும் கருத்து – இது தான் இப்புத்தகம். ஆனால், அத்தனையிலும், வாழ்வின் சாரம்சங்களை தொட்டிருக்கிறார்.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us