WordPress Themes
எரியும் பனிக்காடு

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1890.

Author :ஏனையோர்
Categories :நாவல், மொழிபெயர்ப்பு
Subjects :பிற
No of Pages :336
Publication :ஏனையவை
Year :2019

1 in stock

Add to Wishlist

1 in stock

Description

சேது, பிதாமகன், திரைப்படங்களை எடுத்த பாலாவின் “பரதேசி” திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.

உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் ‘ரெட் டீ’ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முப்பத்து எட்டு ஆண்டுகள் கழித்து முதல்முதலாக எரியும் பனிக்காடாக’த் தமிழுக்கு வருகிறது.

இன்றைய எழில்மிகுந்த மலைநகரங்களையும், அன்னியச் செலவாணியை அள்ளித்தரும் தேயிலை தோட்டங்களையும் கட்டியமைக்கக் கூட்டங் கூட்டமாகப் பலிகொடுக்கப்பட்ட, அந்தக் கண்கவரும் பசிய சரிவுகளில் புதையுண்ட போன ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைதான் ‘எரியும் பனிக்காடு’

1920 முதல் 1930 வரை தேயிலைத் தோட்டங்களில் காணப்பட்ட சூழ்நிலையை வைத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். ஆசிரியர் பி.ஹெச். டேனியல். தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் வேலை செய்தவர் டேனியல். தேயிலைத் தோட்டத்தின் கொடூர முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இதில் வரும் கதாபாத்திரங்கள் மட்டுமே கற்பனையானவை. சம்பவங்கள் அனைத்தும் கற்பனைக்கு எட்டாத நிஜம். 1925-ம் ஆண்டில் திருநெல்வேலி, மயிலோடை கிராமத்தில் வசிக்கும் கருப்பன் – வள்ளி தம்பதியிடமிருந்து இருந்து தொடங்குகிறது கதை. விவசாயமும் இல்லாமல் வேலையும் இல்லாமல் கஷ்டப்படும் கருப்பன், மேஸ்திரி சங்கரபாண்டியனைச் சந்திக்க நேர்கிறது. அவர், ’எஸ்டேட்டில் பாலும் தேனும் ஓடுகிறது, நீங்கள் இருவரும் சந்தோஷமாக ஒருவருடம் சம்பாதித்துவிட்டு, கை நிறைய பணத்துடன் ஊர் திரும்பி, பணக்காரனாக வாழலாம்’ என்று சொல்லி, நாற்பது ரூபாயும் கொடுக்கிறார். கருப்பன் – வள்ளியைப் போல பல குடும்பங்கள் வால்பாறைக்கு வந்து சேர்கின்றன. மேஸ்திரி சொன்னபடி இல்லாமல் அங்கிருந்த சூழ்நிலை முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.

Relate Books

3 in stock

அர்த்தநாரி

Original price was: LKR. 1680.Current price is: LKR. 1430.
‘அர்த்தநாரி’யை எழுதும்போது பெரும் சுதந்திர மனநிலையில் இருந்தேன். என் மனமும் கைகளும் வெகு இயல்பாக இணைந்தன. அதன் வெளிப்பாடுகளை இதில் பரக்கக் காணலாம். இன்றைக்கு நாம் வாழும் வாழ்வில் இத்தனை சுதந்திர மனநிலை கூடாதோ...
Add to cart
Add to Wishlist

1 in stock

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

Original price was: LKR. 3600.Current price is: LKR. 3060.
அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான்...
Add to cart
Add to Wishlist

Out of stock

தண்ணீர் தேசம்

Original price was: LKR. 1750.Current price is: LKR. 1575.
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அந்தச் சமுத்திர முயற்சியின் ஒரு துளிதான் இந்தத் ”தண்ணீர்...
Read more
Add to Wishlist

3 in stock

பொண்டாட்டி

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2240.
தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே. அராத்துவின்...
Add to cart
Add to Wishlist

அசோகர்

Original price was: LKR. 1860.Current price is: LKR. 1580.
இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில்...
Add to cart
Add to Wishlist

Out of stock

45 நொடி பிரசன்டேஷன்

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1080.
நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் கையேடு. 1981-ம் ஆண்டு தங்களுடைய சொந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைப் பெருக்குவதற்காக டானும் நான்சியும் பயன்படுத்திய ஒன்று இப்போது சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள்...
Read more
Add to Wishlist