LKR. 4200 Original price was: LKR. 4200.LKR. 3360Current price is: LKR. 3360.
1 in stock
1 in stock
நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘கௌரவன்’ துரியோதனன்.
இந்த இரண்டாம் பாகத்தில் – போர் மேகங்கள் வெகுவேகமாகச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. தர்மம் மற்றும் அதர்மம் பற்றிய விவாதங்கள் சூடாக நடைபெறுகின்றன.
அதிகாரப் பசி கொண்ட ஆண்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கப் போகின்ற ஒரு போருக்குத் தயாராகின்றனர்.
பெண்களும் பிராமணர்களும் தங்கள் கண்முன்னால் கட்டவிழ்ந்து கொண்டிருக்கின்ற பேரழிவைப் பெரும் அச்சத்துடனும் கையாலாகாத்தனத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பேராசைமிக்க வணிகர்களும் சூழ்ச்சிகரமான புரோகிதர்களும் கழுகுகள்போலக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தன் பங்குக்கு ஓர் ‘அவதாரமும்’ சளைக்காமல் சதி செய்து கொண்டே இருக்கிறது.
இருண்ட கலிகாலம் உதயமாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆணும் பெண்ணும் கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையேயும், கௌரவத்திற்கும் அவமானத்திற்கும் இடையேயும், உயிர்பிழைத்திருத்தலுக்கும் சாவுக்கும் இடையேயும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் . . . .
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us