LKR. 720 Original price was: LKR. 720.LKR. 580Current price is: LKR. 580.
“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்? இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.
இது போன்ற கதைகள் இன்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை. இந்தக் கதைகள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் சாதனாவை உலகம் கொண்டாடும். அந்த இளைஞனுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.
– சாரு நிவேதிதா
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us