Rs. 900 Original price was: Rs. 900.Rs. 810Current price is: Rs. 810.
1 in stock
1 in stock
‘தேடாதீர்கள்.. என் எழுத்துகளில் ஏதுமில்லை’ என்றுதான் இந்த நினைவுகளில் உருகும் பனிக்காடு கவிதைத் தொகுப்புக்குள் ரிஸ்கா எம்மை அழைக்கிறார். ‘தேடாதீர்கள்.. என் எழுத்துகளில் ஏதுமில்லை, அதிரச் செய்யும் ஒரு பேரிடியைத் தவிர’ என்று அக்கவிதையை முடிக்கிறார். உண்மைதான், இவரது கவிதைகள் நெடுக ‘ஓசையற்ற மௌனத்தின் பெருங்கதறலாய்’, அன்பின் பெருமழையைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
எதிர்த்தோடும் சிறு சிறு ‘பளிச்’ மீன்களுக்கிடையே மணல் துகள்களை நகர்த்தியபடி முழங்கால் அளவு தண்ணீராய் தெளிய ஓடிக் கொண்டிருக்கிற ஆற்றுத் தண்ணீரின் இயல்புதான் இவரது மொழிநடை. ஆனாலும் நம்மை உள்ளிழுத்து மூச்சுத் திணற வைக்கும் தத்துவார்த்த ஆழமும் இவரது கவிதைகளில்.
வரிசைகட்டி ஒரே நேர்கோட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளை நின்று பார்க்கையில் ஒரே வரிதான். அமர்ந்து பார்க்கையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எறும்பு. அப்படித்தான் இவரது இக் கவிதை நூலும். பொதுப் பார்வையில் ஒன்றுதான், கூர்ந்து நோக்குகையில் ஒவ்வொன்றும் ஒரு கவிதை.
இந்த நூல் முழுக்க தென்படுகிற ஏராளமான வாக்கியங்கள் அங்கங்கே நம் கைப் பிடித்துக்கொண்டு உருவாக்கும் கதகதப்பில் நம் கைநழுவிப்போன முகங்களும், நாம் கைகழுவிவிட்ட உறவுகளுமாக உருவாக்குகிற உள்வழிக் காயக்கசிவுகளை தவிர்க்கவே இயலவில்லை. தவிர்க்கவும் இயலாது.
– முன்னுரையில் அறிவுமதி