LKR. 1500 Original price was: LKR. 1500.LKR. 1200Current price is: LKR. 1200.
வலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல. உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல். இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:
• அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்குமான மூலகாரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவது எப்படி
• எதிர்மறை எண்ணங்களாலும் உணர்வுகளாலும் அலைக்கழிக்கப்படாமல் இருப்பது எப்படி
• உங்களுடைய சூழல் எதுவாக இருந்தாலும், அன்பு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிப்பது எப்படி
• சிந்தனையைக் கடந்து நிற்கின்ற உங்களுடைய உள்ளுணர்வையும் உள்ளார்ந்த ஞானத்தையும் கைவசப்படுத்துவது எப்படி
• ஊக்குவிப்பு மற்றும் மன உறுதியின் உதவியின்றி, சுய சந்தேகம், சுய அழிவு போன்றவற்றிலிருந்து விடுபடுவது எப்படி
நம்முடைய மனத்தின் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்வதற்கும், நாம் விரும்புகின்ற வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கும் தேவையான அனைத்து விஷயங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us