Rs. 3900 Original price was: Rs. 3900.Rs. 3320Current price is: Rs. 3320.
“நேர நெறிமுறை நிலையம்’, துருக்கிய மொழியில் பதிப்பிக்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்குப் பிறகுதான் உலகின் பரந்த பார்வைக்கு வந்திருக்கிறது. இன்றைய நவீன அதிகார வர்க்க அரசுகளின் இலக்கற்ற ஆட்சிமுறையை நையாண்டி செய்யும் இந்நாவல் ஒரு விசித்திரமான கற்பனைக் கதம்பம். இதன் மையக் கதாபாத்திரமான ஹய்ரி இர்டால் ஒரு கதாநாயகனிடம் எதிர்பார்க்கப்படும் எந்த குணாம்சமும் இல்லாதவன் என்றாலும் இவனுடைய பாத்திரப் படைப்பு வாசகனை வசீகரிக்கவே செய்கிறது.
கடிகாரங்கள் காட்டும் நேரத்தைத் துல்லியமாக நெறிப்படுத்துவதன் மூலம் சமுதாயத்தையே கட்டுப்படுத்தலாம் எனும் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்படும் நேர நெறிமுறை நிலையமும் ஹய்ரி இர்டாலுமாகச் சேர்ந்து மரபும் நவீனமும் முரண்படும் தருணங்களை நகைச்சுவை ததும்ப வாசகச் சிந்தனைக்கு விவாதப் பொருள் ஆக்குகிறார்கள். தன்பினாரின் கதையாடல், காலத்தை மத்தால் கடைவதுபோல் முன்னும் பின்னுமாக அலைக்கழித்து அனுபவ உண்மை எனும் வெண்ணெயைத் திரள வைக்கிறது.