Rs. 2700 Original price was: Rs. 2700.Rs. 2295Current price is: Rs. 2295.
திபெத்தியர்கள் சிறுகதைகளும் எழுதுவார்கள் என்பதையே திபெத்தைக் கடந்து இயங்கிய வெளியுலகம் அறியவில்லை. ஆகவே திபெத்தியச் சிறுகதை தன் முகைவிரித்தலின் அறிவிப்பே இந்த நூல் என்று நான் கருதுகிறேன். அந்த முகைவிரிக்கிற வெளிப்பாடும் கூட அபாயம், அதிகாரம், வாய்ப்பு ஆகிய தருணங்களால் சூழப்பட்டுள்ளது. சிற்சில சமயங்களில் அபத்தமாகவும் விசித்திரமாகவும் இருந்தாலும், இந்தக் கதைகள் துயரார்ந்தனவாய், மனதைத் தொடுகின்றனவாகவே எப்போதும் இருக்கின்றன. இக் கதைகள் மூலமாக, பழமைக்கும் நவீனத்துக்கும், தொழிலுக்கும் நாடுகடத்தப்படலுக்கும், தேசத்துக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே உருவாக்கப்பட்ட இடைவெளியில் அல்லாடும் எளிய திபெத்தியர்களின் வாழ்க்கை பற்றிய சரியானதொரு சித்திரத்தை, ஆங்கில வாசகர்களின் பார்வைக்குக் கதாசிரியர்கள் வைக்கிறார்கள்.