தங்களுடைய பிரார்த்தனைகள் பலித்துள்ளதாக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் எண்ணற்றோர் கூறி வருவதை நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். மனப்பூர்வமான, விசுவாசமிக்கப் பிரார்த்தனைகள் பேரழிவுகளில் இருந்து பலரைக் காப்பாற்றி இருக்கின்றன, மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களைப் பிழைக்க வைத்திருக்கின்றன, தாங்க முடியாத துக்கங்களைத் தாங்கிக் கொள்ளும் வலிமையைக் கொடுத்திருக்கின்றன, நம்புதற்கரிய இலக்குகள் அடையப்படுவதைச் சாத்தியமாக்கியுள்ளன, இன்னும் பல பேரதிசயங்களை உருவாக்கியுள்ளன.
நெஞ்சார்ந்த, ஆழமான நம்பிக்கையுடன்கூடிய ப்ரார்தனைகளுக்கும், ஆழ்மனத்திற்க்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும், அப்ப்ரார்தனைகள் எப்படி பலிக்கின்றன என்பது குறித்தும் ஜோசஃப் மர்ஃபி இந்நூலில் ஏராளமான உண்மைக் கதைகளின் உதவியுடன் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.