WordPress Themes
மிர்தாதின் புத்தகம்

Original price was: LKR. 1650.Current price is: LKR. 1480.

Author :உலக எழுத்தாளர்கள்
Categories :கட்டுரை
Subjects :ஆன்மிகம்
No of Pages :272
Publication :ஏனையவை
Year :2016

Out of stock

Out of stock

Description

உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. இந்த  புத்தகம்  வாழ்கையை புரட்டிபோடும் மகத்தான சக்திமிக்கது. இவரின் வார்த்தைகள் எனக்கு வேதம் போல ஒலிக்கிறது படிக்க படிக்க சற்று மிரண்டு போவோம். அத்தனையும் எதார்த்தத்தின் பிம்பம், அன்பே வாழ்வின் சாறு, வெறுப்பு மரணத்தின் சீழ், சிறந்த பேச்சு ஒரு செம்மையான பொய், மோசமான மௌனம் ஒரு நிர்வாண  உண்மை என்று கூறும் ஆசிரியரின் வார்த்தைகளில் புதைந்திருக்கும் உண்மை நம்மை சுடுகிறது. அற்புதமான ஆற்றலை கொடுக்கும் வலிமையான வார்த்தைகளால் நிறைந்த இந்நூல் நம்மை உணர செய்யும் .

ஞானத்தின்பால் நாட்டமுடையவர்களிற்கு இந்தப் புத்தகம் பெரும் கொடையாக இருக்கும். இதை ஒரு நாவல் என்று கூறலாம். அல்லது ஒரு தத்துவப் புத்தகம் என்றும் சொல்லலாம்.

‘வெற்றி பெறும் ஏக்கம் கொண்டவர்களுக்கு இது, ஒரு கலங்கரை விளக்கமும், ஒரு கடற்கரையும் ஆகும்.மற்ற அனைவருக்கும் இது ஓர் எச்சரிக்கை.’ இவ்வாறு மிகெய்ல் நைமி ஒரு எச்சரிக்கையுடன் பயணத்திற்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறார். உண்மையில் அது ஒரு பயணத்துடன்தான் தொடங்குகிறது. ஆதி வெள்ளப்பெருக்கின் பின்னால் உயிர்தப்பியவர்களுடன் மிதந்துபோன பேழை கரை ஒதுங்கிய இடமான பலிபீடச் சிகரத்தை நோக்கிய ஒருவனின் பயணமே அது. அந்த ஒருவன் நாமாக இருக்கிறோம். அவன் தனது பயணத்தை வழமைக்கு மாறாய் மலையின் ஆபத்தான செங்குத்துப் பாதையில் அமைத்துக்கொள்கிறான். பலிபீடச் சிகரத்தை அடையும் வரை வழியில் அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் சிலிர்ப்படைய வைக்கின்றன. அங்கு சந்திக்கும் ஒவ்வொருவிதமான மனிதர்களும் அவர்களின் வார்த்தைகளும் அற்புதமானவை.

மிகெய்ல் நைமி கலீல் ஜிப்ரானின் உயிர்த்தோழன். ஜிப்ரான் மொத்தமாக 99 புத்கதங்கள் எழுதியிருக்கிறார். அவருடன் கூடவே வாழ்ந்த மிகெய்ல் நைமி ஒரே ஒரு புத்தகத்தை எழுதி இந்த உலகத்திடம் கொடுத்துவிடுகிறார். அந்த ஒரு புத்தகமே எல்லாவற்றிற்கும் விடையாக அமைகிறது. மிர்தாதின் புத்தகம் நம்மை அழைத்துச் செல்லும் உலகம் வேறு. அந்தப் புத்தகத்திற்கான வாசிப்பு அனுபவமே ஒரு தியானத்திற்கு நிகரானது. அதன் முடிவும் முடிவற்ற
பல்லாயிரம் கேள்விகளுக்கான விடையாகவும் அமைகிறது.

Relate Books

Out of stock

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! – 2

Original price was: LKR. 770.Current price is: LKR. 690. Read more
Add to Wishlist

Out of stock

அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்!

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1680. Read more
Add to Wishlist

ஹபீபி

Original price was: LKR. 1960.Current price is: LKR. 1500. Add to cart
Add to Wishlist

2 in stock

வாடிவாசல்

Original price was: LKR. 600.Current price is: LKR. 510. Add to cart
Add to Wishlist

Out of stock

உண்மை இராமாயணத்தின் தேடல்

Original price was: LKR. 1380.Current price is: LKR. 1240. Read more
Add to Wishlist

Out of stock

மிளகு, பருத்தி மற்றும் யானைகள்

Original price was: LKR. 750.Current price is: LKR. 670. Read more
Add to Wishlist