Rs. 8400 Original price was: Rs. 8400.Rs. 7140Current price is: Rs. 7140.
மிளகு, ஏலம் என்று வாசனைத் திரவியங்களைப் பிறப்பித்து, விற்பனைக்கு உலகச் சந்தையில் கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த இந்துஸ்தானத்துக் குறுநாடுகளோடு போர்ச்சுக்கல்லும் ஹாலந்து என்ற டச்சுநாடும் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்தன.
முக்கியமாக மிளகு உற்பத்தியில் உலக அளவில் தரமும், சுவையும், மணமும் செரிந்த மிளகை அவர்களுக்கு அளித்த கெருஸொப்பா தேசத்தோடு மிகச் சிறந்த நட்பும் இணக்கமும் காட்டிய போர்ச்சுகல், கெருஸொப்பாவை ஐம்பத்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த சென்னபைராதேவிக்கு கௌரவமான பட்டப்பெயராக மிளகுராணி என்ற பெயரைச்சூட்டி உரக்கச் சொல்லிக் கவுரவித்தது.
சென்னபைராதேவியின் இந்தச் சாதனைகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் புறக்கணிக்கப்பட்டவை. ஏனோ தெரியாது. சரித்திரத்தின் அடிக்குறிப்பாகக் கூட இவை அதிகம் இடம்பெறவில்லை.
மிளகின் அடிச்சுவட்டில் பயணப்படும் எந்த வரலாற்று ஆசிரியனும் தவிர்க்க முடியாத பதினாறாம் நூற்றாண்டு அரசி சென்னபைராதேவி.