Rs. 2100 Original price was: Rs. 2100.Rs. 1785Current price is: Rs. 1785.
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக் கடினமாயிருந்தாலும் பாதையில் எதிர்ப்படும் துயரங்களைத் தாண்டி இறுதியில் ஒளியைக் கண்டடையும் நம்பிக்கையை அவர்கள் கைவிடுவதில்லை. ஆனால் உண்மைக்கு வெகு நெருக்கமாயிருக்கும் கதைமனிதர்களை ஏதோவொரு புள்ளியில் வாசகர்கள் தங்களோடு அடையாளப்படுத்திக்கொள்ள முடிவதே இந்தத் தொகுப்பின் பலம்.
– கார்த்திகைப் பாண்டியன்