LKR. 5400 Original price was: LKR. 5400.LKR. 4320Current price is: LKR. 4320.
In stock
அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணர முடியும். ஜாக்கிரதை, படிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்க்கக் கூடும். அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் வூடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாயத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்க்கோட்டுத்தன்மை இல்லாத, நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக் கலைத்துப் போட்டு விட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைப் போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம். ஆரம்பமும் முடிவும் அற்ற இந்தப் பித்தவெளிப் பிரதேசம் ‘சைபர்’ உலகின் அபத்த நாடகங்களை பெரும் கேளிக்கையாகவும் கேலிச் சித்திரங்களாகவும் மாற்றுகிறது. சர்வதேச இலக்கியப் பிரதிகளும் சினிமாவும் உப பிரதிகளாக ஊடுபாவும் உப பாதைகளில் பயணிக்கத் துவங்கும் ஒரு வாசகர் தன் வாழ்நாளுக்குள் வாசித்துத் தீர்க்க முடியாத ஒரு மகத்தான சவாலையும் இந்த நாவல் முன்வைக்கிறது.
WhatsApp us