நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் கையேடு.
1981-ம் ஆண்டு தங்களுடைய சொந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைப் பெருக்குவதற்காக டானும் நான்சியும் பயன்படுத்திய ஒன்று இப்போது சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள் பல புரிந்துள்ள ஒன்றாக விசுவரூபம் எடுத்துள்ளது. இந்த 30வது சிறப்புப் பதிப்பில் இரண்டு புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்புத்தகம் உங்களுடைய வாழ்க்கையில் அசாதாரணமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.
உங்களுடைய இன்றைய தினம் எப்படி இருந்தது ?
காலையில் அரக்கப் பறக்க எழுந்தீர்களா ?
குழந்தைகளைப் பள்ளியில் கொண்டுவிட நேரமாகிவிட்டது என்று முனகிக் கொண்டிருந்தீர்களா ?
வேறு ஒருவருக்காக வேலை செய்ய சுறுசுறுப்பாகக் கிளம்பினீர்களா ?
இன்றும் குடும்பத்தினரோடு நேரத்தைச் செலவிட முடியாது என்று புலம்பிக் கொண்டிருந்தீர்களா ?
வருங்காலம் குறித்த பயத்தோடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தீர்களா ?
இந்த வருடமும் உல்லாசப் பயணம் செல்வது சாத்தியமில்லை என்று உங்களை நீங்களே நொந்து கொண்டிருந்தீர்களா?
நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் வெற்றிப் பெற்றப் பிறகு உங்கள் வாழ்க்கை இப்படியிருக்கும்:-
எப்போது விடியப்போகிறது என்று நீங்கள் ஆவலாகக் காத்திருப்பீர்கள்
உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்புக் கணிசமாக அதிகரித்திருக்கும்
நீங்கள் உங்கள் சொந்த வியாபாரத்தை நடத்தும் பெருமிதத்தால் நிமிர்ந்து நிற்பீர்கள்
உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து செலவிட உங்களுக்கு அபரிமிதமாக நேரமிருக்கும்
ஆடம்பரமான உல்லாசப் பயணம் செல்லக் கூட நேரமும் இருக்கும், பணமும் இருக்கும்
மொத்தத்தில் வருங்காலம் உங்கள் கைகளில் இருக்கும்
மேற்கூறப்பட்டுள்ளவற்றையும் அவற்றுக்கு மேலாகவும் உங்களுடைய நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் மூலமாக நீங்கள் அடைய இப்புத்தகம் உங்களுக்குப் பெருமளவு உதவும்.