Rs. 660 Original price was: Rs. 660.Rs. 590Current price is: Rs. 590.
1 in stock
1 in stock
அலாஸ்காவின் எல்லைப்பகுதியான பனிப்பிரதேசங்களில் தங்கம் கிடைப்பதாகக் கருதி மக்கள் தேடி அலைந்த ஒரு காலகட்டத்தில் நடக்கிற கதை. அதைவிடவும் அந்தப்பகுதிக்கு சென்ற மனிதர்களுக்கு உணவளிக்கவும், தபால்கள் தரவும் பயன்படுத்தப்பட்ட நாய்கள் பற்றிய மிக நுணுக்கமாய் எழுதப்பட்ட நாவல் இது.
குறிப்பாய் ‘பக்’ என்ற ஒரு நாயின் வாழ்க்கையை அபாரமான விவரணையோடு சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். அதன் தொடக்கம், பல்வேறு மனிதர்களிடம் கைமாறிப் போகும் அதன் பயணம். அதில் அதற்கு கிடைக்கும் அற்புதமான அனுபவங்களை காட்சிப்பூர்வமாய் நம் கண் முன் நிறுத்திக் காட்டுகிறது இந்த நாவல்.
அந்த நாயின் அன்பு, அதன் குரோதம், அதன் பகை, தன் முதலாளி மீது காட்டும் அளவுகடந்த அந்த விசுவாசம் என அந்தக்கதையில் அந்த நாய் ஒரு மனிதரூபமாகவே நம்மை நினைக்கவைத்து விடுகிறது. என்ன சொல்ல? கிடைத்தால் படித்துப்பார்த்துவிடுங்கள். அவ்வளவுதான்.
பெ.தூரன் அவர்களின் சிறப்பான மொழிப்பெயர்ப்பையும் பாராட்டியாக வேண்டும். நிறைய ஆச்சர்யங்கள் நாவல் முழுவதும் இருந்தாலும் இது ஜாக் லண்டனால் நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்! என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்த கானகத்தின் குரல்!