Rs. 875 Original price was: Rs. 875.Rs. 740Current price is: Rs. 740.
3 in stock
3 in stock
மாற்றம், குறுநாவல் வடிவத்தில் உள்ள ஒரு சுயசரிதை அல்லது சுயசரிதை வடிவத்தில் உள்ள ஒரு குறுநாவல் என்று விவரிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஆட்சி மாற்றங்களையோ தலைவர்களின் பட்டியலையோ சாராமல் ஒரு சமூகத்தில் தனக்கு நெருங்கிய மனிதர்களின் வாழ்வை உற்றுப் பார்ப்பதன் மூலம் ஒரு நாட்டின் வரலாற்று மாற்றங்களைப் பதிவுசெய்ய முடியும் என்று வெற்றிகரமாக நிறுவுகிறது. சீனாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நடந்த மாற்றங்களை, பள்ளிக்கால நண்பர்களின் வாழ்வில் நடந்த மாற்றங்களைப் பதிவு செய்வதன் வழியாகச் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் மோ-யான். கற்பனையும் நிஜமும் வரலாற்றுப் பார்வையும் சமுதாயப் பார்வையும் கலந்து மோ-யான் ஒரு உலகை உருவாக்குகிறார். அவ்வுலகின் செறிவுப் பின்னல் வில்லியம் ஃபாக்னரையும் கேப்ரியல் கார்சியா மார்கஸையும் ஞாபகப்படுத்துகிறது. அதேநேரத்தில் பழைய சீன இலக்கியத்திலிருந்தும் வாய்வழி மரபிலிருந்தும் பிரியும் ஒரு புள்ளியையும் கண்டுபிடிக்கிறது.
– இலக்கியத்துக்கான நோபல் பரிசுக் குழு, 2012.
சுந்தர ராமசாமி கட்டுரை ஒன்றில், பனித்துளியில் பனைமரம் தெரியும். சிறியதாகத் தெரியும் என்று சொல்கிறார். இந்தக் குறு நாவலிலும் மாற்றத்தின் பரிமாணங்கள் தெரிகின்றன; சிறியதாகத் தெரிகின்றன. நமக்குள்ளே அசைபோட்டு அவற்றின் பிரமாண்டத்தைப் பற்றி வியந்துகொள்ளும் வெளியை மோ-யான் அளிக்கிறார். மோ-யான் வட கிழக்குச் சீனத்தில் இருக்கும் கிராமப் பள்ளி ஒன்றைப் பற்றி எழுதுகிறார். பள்ளியில் கலாச்சாரப் புரட்சியின் தாக்கம் தெரிகிறது. ஆனால் கிராமப் பள்ளி நமது கிராமப் பள்ளிகளைப் போலத்தான் இருக்கிறது. கதையின் பாத்திரங்களோடு நம்மைச் சேர்த்துப் பார்த்து நமக்கும் அவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை என்று படிப்பவர் அனைவரும் உணர முடியும். இந்த அன்னியப்பட வைக்காத தன்மையே மொழிபெயர்ப்பின் வெற்றி என்று சொல்ல வேண்டும்.
– பி.ஏ. கிருஷ்ணன்