LKR. 970 Original price was: LKR. 970.LKR. 880Current price is: LKR. 880.
“தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள்; நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்த பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும்.
ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால் அவள் கண்ணுக்குப் பிடித்த பெண் அவ்வளவுதான். கண்ணுக்குப்பிடித்த பெண்ணை மனதுக்கு பிடிக்கவைக்கும் முயற்சிகளையும் காதல் என்பான். கண்ணுக்குப்பிடித்த பெண்ணை பின்தொடர்ந்து அவளைக் கவரும் முயற்சிகளின் ஆபத்து என்னவென்றால், எப்படியாவது அவளுக்கு பிடித்தமானவனாக ஆகிவிடவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு நிலையில் உருமாறி அவளுக்கு என்னை பிடிக்காமல் போகவே கூடாது என்று ஆணின் உள்ளுக்குள் ஒரு அகங்காரமாக (ego) மாறும்.
இது மேலும் தீவிரமடைந்து தன்னுடைய ego satisfaction – னிற்காக அளப்பரிய அன்பையே தரும் நிலைக்கு போகும், அவள் இதுவரைக்கும் கண்டிராத அன்பு. உயிரை கூட பணயம் வைக்கும். இதையெல்லாம் பார்த்து என்னவொரு ஆத்மார்த்த காதலென்று அப்பெண் அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டதும் அவன் இயல்புக்குத் திரும்பிடுகிறான். அவளைப்பொறுத்தவரை அவன் வேறு ஒரு ஆணாக மாறிவிடுகிறான்.
தன்னை விரட்டி விரட்டி காதலித்தவன், தனக்கு பிடித்தமானவை எல்லாம் தெரிந்து வைத்து நிறைவேற்றியவன் இவன் இல்லையே என்று பெண் குழம்புகிறாள்.”
– யாத்திரி
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us