Rs. 1470 Original price was: Rs. 1470.Rs. 1250Current price is: Rs. 1250.
3 in stock
3 in stock
மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளரான கார்ல் மார்க்ஸின் இந்தச் சிறப்பான வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது வெளிவருகிறது. நூலாசிரியர் என். ராமகிருஷ்ணன் மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் விற்பனையாளராகவும், பின்னர் ஜனசக்தி ஏட்டின் மதுரை உதவி நிருபராகவும் பணியாற்றினார். 1961-64-ம் ஆண்டுகளில் சென்னை ஜனசக்தி ஏட்டில் பணியாற்றினார்.
1964-68-ம் ஆண்டுகளில் தீக்கதிர் ஆசிரியர் குழு பணியில் இருந்தவர். 1969-83-ம் ஆண்டுகளில் புதுடெல்லியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற அலுவலக முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தீக்கதிர், சி.ஜ.டி.யு. செய்திக் கட்டுரையாளராகவும், தீக்கதிர் நாளேட்டின் விளம்பரப் பொறுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். ‘அயர்லாந்து – எண்ணூறு ஆண்டு விடுதலைப் போர்’, ‘நீதிக்குப் போராடும் பாலஸ்தீன மக்கள்’, ‘மகத்தான பிரெஞ்சுப் புரட்சி’, உள்ளிட்ட ஐம்பது நூல்களின் ஆசிரியர்.