Rs. 750 Original price was: Rs. 750.Rs. 640Current price is: Rs. 640.
Out of stock
Out of stock
சுந்தர ராமசாமியின் கவிதைக் காலத்தின் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும் எள்ளலும் தனிமனித உணர்வுகளும் நிரம்பியிருந்த முதல் பருவக் கவிதைகளிலிருந்து (நடுநிசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை ‘யாரோ ஒருவனுக்காக’ தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள். உரைநடையின் தருக்கத்தைச் சார்ந்து கவிதையின் மென் உணர்வில் ஊன்றி படைக்கப்பட்ட கவிதைகள் இவை. அணிகளும் அலங்காரங்களும் துறந்து வாழ்வின் தருணத்தை நேர்முகம் காணும் உந்துதலின் வெளிப்பாடு இந்தப் புதிய கவிதையாக்க முறை.
ஜென்மத்தைப் பொருள்படுத்தும் ஒரு கவிதையைத் தேடும் மனதின் நம்பிக்கை அல்லது கவிதையை நம்பிக்கைக்குரியதாக்கும் வாழ்வின் சமிக்ஞை இந்தத் தொகுப்பு.