Rs. 1575 Original price was: Rs. 1575.Rs. 1340Current price is: Rs. 1340.
9998 in stock
9998 in stock
நாவலின் கதாபாத்திரங்களும் காலமும் அரண்மனைகளும் குதிரைகளும் எத்தனை எழுதினாலும் விவரித்தாலும் விரிவு கொள்ளவும் கதை சொல்லவும் காத்துக்கொண்டிருக்கின்றன. தன்னை மீண்டும் ஒரு புனைவுகுள்ளும் மீண்டும் ஒரு தனத்திர்க்குள்ளும் அனுமதிக்கும் ஒரு படைப்பு நிச்சயம் எக்காலத்திற்குமான படைப்புதான், அவை உருவாக்கும் இடைவெளிகளையும் புதிய சிந்தனைகளையும் விருப்பமுள்ளவர்களும் சக்தி படைத்தவர்களும் நிச்சயம் கண்டடைவார்கள்.
நித்ய கன்னி அன்றாடம் நாம் காண்கிற காதற் கதையோ, கற்புக் கதையோ, கற்பு கேட்ட கதையோ அல்ல. மனிதன் உயர்வை நோக்கி நடத்தும் இயற்கைப் போராட்டங்களைச் சில விசித்திரப் பாத்திரங்களின் மூலம் இந்நூல் சித்தரிக்கிறது. காலம் காலமாகப் பெண்மையின் எதிர்க்க முடியாத ஆட்சியை அடக்கி வைக்க ஆண் பலவித அணிவகுப்புகளை மாற்றி மாற்றி அமைத்து வருகிறான். ஆனால் உண்மையாகவே ஆளப்பிறந்த பெண் எப்படியோ அவற்றை மீறிக்கொண்டுதான் ஓங்கி நிற்கிறாள். வெங்கடராமன் நம் முன் நிறுத்திய பாத்திரங்களை உருவகப் பாத்திரங்களாகப் பார்த்தால் நமக்கு இந்த உண்மை புலப்படும்.