Rs. 3900 Original price was: Rs. 3900.Rs. 3320Current price is: Rs. 3320.
3 in stock
3 in stock
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் “பனி”. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.
பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் “பனி”. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங்களுடனும் சொல்கிறது இந்த நாவல்.
தனது படைப்புகளின் நிரந்தரக் களமான இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக். ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் “கா” வின் அனுபவங்களே இதன் கதை. இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு.