LKR. 1950 Original price was: LKR. 1950.LKR. 1660Current price is: LKR. 1660.
In stock
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்’ காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியைக் கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாகக் கையாள்கிறது. முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள். பல்வேறு இன்பங்களையும் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்னும் கேள்வியை வலுவாக எழுப்புகிறது இப்படைப்பு.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us