Rs. 1500 Original price was: Rs. 1500.Rs. 1275Current price is: Rs. 1275.
18வது அட்சக்கோடு ஒருவரலாற்று நாவல் – சுதந்திரத்துக்குப் பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை எளிய இளைஞனைச் சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாகப் பதிவு செய்கிறது. தனிமனிதனில் இருந்து தேசம் நோக்கிப் பார்க்கும் ஒரு படைப்பாளியின் பார்வையில் பதிவு செய்யப்பட்ட “மைக்ரோ” வரலாறு. இதில் தனி மனிதர்களின் அரசியல் கோட்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களின் பொருளாதார நிலை பேசப்படுகிறது. தனிமனிதப் பார்வையில் நிஜாமினுடைய காரியதரிசிகளின் செயல்பாடுகள் அலசப்படுகின்றன. “மைக்ரோ” வரலாறுகள் காலத்தின் ஓட்டத்தில் மறுவாசிப்புகளிலும் மறுஆய்வுகளிலும் மாற்றம்பெறுவதில்லை. அவை தனிமனிதனின் பார்வையில் இருந்து எழுதப்படும் எளிய சாட்சிகளாக படிமங்களாகின்றன. 1940களின் நிகழ்வுகள் 1970களில் நாவலாகப் பதிவு செய்யப்பட்டு 2010களில் வாசிக்கும் இன்றைய தலைமுறை வாசகனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு இந்நாவல் பயணப்படுகிறது