LKR. 1200 Original price was: LKR. 1200.LKR. 1020Current price is: LKR. 1020.
Out of stock
Out of stock
நேர்க்கோட்டில் போகிற ஒரு வாழ்க்கையுண்டு. அதில் தர்மங்கள் உண்டு. தர்மங்கள் குறித்த சங்கடங்கள் உண்டு. தர்மம் என்று சொல்லப்படுபவற்றை எட்டி உதைக்கும் ஒரு நிழல் உலக வாழ்வும் அந்தக் கோட்டை ஒட்டியே கிளர்ந்தெழுந்து வருகிறது. அரசியல் சார்ந்த வணிகத்தில் அவர்களின் இருப்பு தவிர்க்க முடியாதது. ஏழைகள் நிறைந்த தேசத்தில் அவர்களது தலைவிதியைத் தீர்மானிப்பவர்களுக்கு நெருக்கமான இருட்டு உலகத்தைப் பதிவு செய்யும் நாவல் இது. தரையிலிருந்து புறப்பட்டு கோபுரத்தைச் சாய்க்க விளையும் இளம் எத்தனத்தை அதன் பின்னணியோடு விரிக்கிறது. ஒழுக்கவியலைப் போற்றும் தட்டிலிருந்து புறப்பட்ட ஒருத்தன், வாழ்வின் நிமித்தமாக, அது சொல்லும் வெற்றியின் நிமித்தமாக, அத்தனையையும் போட்டுக் காலில் மிதித்துக் கடந்து போய் இதுவரை கற்பிக்கப்பட்ட வாழ்வைக் கேள்விக்குள்ளாக்குகிறான்.
தர்மம் எது? தர்மனிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி வேறொரு உலகத்தின் பின்னால் நின்று மறுபடியும் வலுவாகக் கேட்கப்படுகிறது. தர்மத்தின் மீது அக்கறையே இல்லாத நட்சத்திர வாழ்விற்குப் பின்னால் இருக்கிற சல்லித்தனங்களைக் காட்சிப்படுத்துவதன் வழியாக ஒரு புதிய திறப்பை வாசகர்களுக்கு அளிக்கிறார் சரவணன் சந்திரன்.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us