Rs. 1260 Original price was: Rs. 1260.Rs. 1070Current price is: Rs. 1070.
Out of stock
Out of stock
கார்ல் எழுத்துக்களின் இன்னொரு முக்கியமான பண்பு அவை ideological (கருத்து நிலை) சுமையற்றவை என்பது. அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை, அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார். பெரும்பாலும் பிரச்சினைகளை நுணுக்கமாகப் பார்க்காமல் பொதுப்புத்தி சார்ந்து கருத்துக்கள் வெளிவருவதை கார்ல் மார்க்ஸ் கூர்மையாகப் பார்க்கிறார். அவற்றை விமர்சிக்கிறார். மறுக்கிறார். அந்தவகையில் சமூக ஊடகங்களில் மேலெழுந்து வந்து ஒரு பத்து நாட்கள் ஆட்டம் காட்டிவிட்டுப் பின் மறைந்து போகும் நீர்க்குமிழிகள் போன்ற கருத்துகளை விமர்சிக்கும் வகையில் ‘சமூக ஊடகங்களின் மனச்சாட்சியாகவும்’ அவர் தன்னை நிறுத்திக் கொள்கிறார்.
– அ.மார்க்ஸ்
“திமுக ஆக்கிரமிச்சத சன்னும் கலைஞர் டிவியும் சொல்லாது. அதிமுக ஆக்கிரமிச்சத ஜெயா டிவி சொல்லாது. விஜயகாந்த் ஆக்கிரமிச்சத கேப்டன் டிவி சொல்லாது. பச்சமுத்து ஆக்கிரமிச்சத புதிய தலைமுறை சொல்லாது. வைகுண்டராஜன் ஆக்கிரமிச்சத நியூஸ் செவன் சொல்லாது. தந்தி டிவி எவன் ஆக்கிரமிச்சாலும் சொல்லாது. மத்த டிவில்லாம் நினைச்சாலும் சொல்ல முடியாது. கடைசியா இருக்கது பொதிகை தான். அதுக்கு ஆக்கிரமிப்புன்னாலே என்னன்னு தெரியாது.”
ஜி. கார்ல் மார்க்ஸ்