Rs. 1778 Original price was: Rs. 1778.Rs. 1420Current price is: Rs. 1420.
Out of stock
Out of stock
வ.கௌதமனின் ‘மகிழ்ச்சி’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
குமரி மாவட்டத்திலுள்ள இரணியல் செட்டியார் என்ற ஒரு சமுகத்தின் சமுக, கலாச்சார வாழ்வை வெகு விஸ்தாரமாகச் சொல்கிறது. “தலைமுறைகள்”. “திரவி” என்ற திரவியத்தின் பார்வையில் நாவல் சொல்லப்படுகிறது. இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது போல் எனக்குத் தெரிந்தவரை எந்த இந்திய நாவலிலும் ஒரு சமுகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், சம்பிரதாயங்கள் இவ்வளவு சாவிஸ்தாரமாகச் சொல்லப்படவில்லை.
“தலைமுறைகள்” ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல, ஒரு சமுகத்தின் கதையும் கூட. நாவல் விரிய விரிய உண்ணாமலை ஆச்சி, கூனாங்காணிப் பிள்ளை பாட்டா, நாகருபிள்ளை, திரவி, சாலம், நாகம்மக்கா, சிவனந்தபெருமாள், குற்றாலம் என்ற கதாபாத்திரங்களும் விரிகின்றன. யுகயகாந்திரமாகக் காப்பற்றப்பட்டுவரும் சடங்கு, சம்பிரதாயங்களைக் காப்பாற்ற முடியாமல், அவற்றின் செலவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் நாகருபிள்ளையும் அவரது குடும்பமும் நாவல் முழுவதும் வியாபித்து நிற்கின்றனர்.
-வண்ணநிலவன்