Rs. 1710 Original price was: Rs. 1710.Rs. 1450Current price is: Rs. 1450.
இந்த நாவலில் கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் மிகக் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப்படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள் காலம், இடம், பொருள் சார்ந்து வாசகனை முழுமையாக தனக்குள் இழுத்துக்கொள்கின்றன. பாத்திரங்கள் தம்மளவில் முழுமை பெற்றவையாகவும் இயல்பு மீறாதவையாகவும் இருக்கின்றன. உரையாடல்களின் வழியே நாவல் தன் பாதையைத் தானே உருவாக்கிக்கொண்டு செல்கிறது.
இந்த நாவலின் கதாபாத்திரமொன்று தன் துயரத்தின் பூதத்திடம் நீதி கேட்டு மன்றாடுவதுபோல இந்த நாவல் முழுக்க நிறைந்திருக்கும் துயர பூதங்கள் தமிழ் வாழ்வின் சொல்லப்படாத கதைகள் பலவற்றை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
தமிழில் மிக முக்கியமான நாவலாசிரியன் ஒருவனின் வருகையை இந்த நாவல் அறிவிக்கிறது.
– மனுஷ்ய புத்திரன்