Rs. 1050 Original price was: Rs. 1050.Rs. 890Current price is: Rs. 890.
Out of stock
Out of stock
உலகின் மிக முன்னேறிய அமைதி யான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங்களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது.
இந்நாவலில் ஈலையாஸ் ருக்லா என்ற மையப் பாத்திரத்தின் மூலமாக நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் மனிதன் ஒவ்வொருவரும் தனது அக உலகில் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலமாக தனது அடையாளத்தை தேடித் தேடி தோல்வியடைந்து, மேலும் தனிமைப்படுத்திக்கொள்வதையும், விரத்தியும், உறவுகளோடு பாராட்டும் போலி அன்பும் மட்டுமே மிச்சமிருப்பதைக் கண்டுகொள்வதையும் தாக் ஸுல்ஸ்தாத் சித்தரிக்கிறார்.
பெரிதும் அகவயப்பட்ட இந்நாவல் நார்வீஜியக் கலாசாரப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தாலும் தனிமையுற்றிருக்கும் எல்லா நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற உலக நாவலாகவே இருக்கிறது.