விடிவதற்குள் வா’ என்ற நாவல் முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்தது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊருக்குள் புகைந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது. தலைகள் உருளுகின்றன. உடல்கள் சரிகின்றன. பதைபதைக்க வைக்கும் ஒரு மரண சாகசம் ஆரம்பமாகிறது.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us